fbpx
Homeபிற செய்திகள்‘பரிசு, பாராட்டு, விருது மனிதர்களை பல சாதனைகளைச் செய்ய தூண்டும்’- வாழும் கலை அமைப்பின் கண்ணதாசன்...

‘பரிசு, பாராட்டு, விருது மனிதர்களை பல சாதனைகளைச் செய்ய தூண்டும்’- வாழும் கலை அமைப்பின் கண்ணதாசன் பேச்சு

சங்கமித்ரா சுற்றுச்சூ ழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில் திருப்பூரில் முன்னாள் குழந்தைத் தொழிலாளர் மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை அறங்காவலர் சிந்து வரவேற்றார். வாழும் கலை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜீ.கண்ணதாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:

கல்வி கற்பித்த ஆசிரியர்களை வணங்குவதும், பாராட்டுவதும் அவர்களை மகிழ்விப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கொடுமுடி ஸ்ரீசங்கர வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அழைத்து இந்த விழாவில் அவர்களை கௌரவிப்பது சாலச் சிறந்ததாகும்.

கல்வி என்பது தனிமனிதனை உயர்த்துவதோடு சமூகத்திற்கு பெரிய பங்களிப்பையும் எல்லைகளைக் கடந்து சாதனைகளைப் படைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.

பரிசும் பாராட்டும் விருதுகளும் மனிதர்களை மேலும் பல சாதனைகளைச் செய்ய தூண்டுகிறது என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் இன்றைக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது பாராட்டுக்குரியதாகும் என்றார்.

கொடுமுடி எஸ்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் (ஓய்வு) கே.பி.சிவசுப்பிரமணியம், விருட்ச இன்டர்நேஷனல் பள்ளித்தாளாளர் எஸ்.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.பி.சின்னச்சாமி, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சவாமி திருமட ஆதீனம் சுந்தரராசு அடிகளார், தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குநர் டி.வி. விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர் ஆர்.வி.எஸ்.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் டி. சிவக்குமார், 75 பேருக்கு அன்னை தெரசா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆன்மீகச் செம்மல், இளம் பேச்சாளர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது,கல்விச் சோலை விருது உள்ளிட்ட பல்வேறுவிருதுகளை வழங்கி பேசும்போது, குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்வில் கல்வி என்ற விளக்கை ஏற்றி அவர்களின் வாழ்வில் மிகப்பெரியமாற்றத்தை ஏற்படுத்திய குழந்தைத் தொழிலாளர் திட்ட தன்னார்வலர் ஆசிரியர் களுக்கு விருது வழங்கி பாராட்டியது சிறப்புக்குரி யது என்று குறிப்பிட்டார். மாணவர்களுக்கு கல்வி உதவிப்பொருட்களை வழங்கினார் லீலாஜெகன்.
ஞானசௌந்தரி ஜெயந்தன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img