fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் வேதாந்தா மாரத்தான்

தூத்துக்குடியில் வேதாந்தா மாரத்தான்

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான வேதாந்தா நிறுவனம் ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக மாபெரும் வேதாந்தா மாரத்தான் ஒன்றை அறிவித்துள்ளது.

வரும் 16-ம் தேதி டெல்லியில் இந்த ஓட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஓட்டத்தில் அந்நிறுவன ஊழியர்கள் பொதுமக்கள் பங்கெடுத்து கொண்டு எவ்வளவு தூரம் நடக்கிறார்களோ அவ்வளவு எண்ணிக்கையிலான ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

வேதாந்தாவின் கீழ் செயல்படும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் டெல்லியில் நடைபெறும் மாரத்தானில் நேரடியாக பங்கெடுத்து கொள்ள முடியாது என்பதால் இதற்காக தனியாக செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு இந்த திட்டத்தில் மக்கள் பங்கெடுத்து கொள்கின்றனர். அந்த வகையில் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஊழியர்கள் ஒருநாள் நடைபயணம் மேற்கொண்டனர்.

வேதாந்த நிறுவனத்தின் அற்புதமான இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்ட நடைபயணம் நடைபெற்றது. இதில் ஸ்டெர்லைட் ஆதரவு கிராமங்களை சார்ந்த மக்கள் பங்கெடுத்து கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஸ்டெர்லைட் குடியிருப்பு வளாகத்தில் ஒன்றாக இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில், மக்கள் நடந்து வந்த தூரத்திற்கு ஏற்ப ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்த பயணத்தில் கலந்து கொண்டவர்கள் வரும் 16-ம் தேதி வரை நடக்கும் தூரம், செயலி வாயிலாக கணக்கிடப்பட்டு அதன்படி அத்தனை நபர்களுக்கு உணவு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img