fbpx
Homeபிற செய்திகள்மெலோராவின் 4 புதிய டிசைன் கலெக்ஷன் அறிமுகம்

மெலோராவின் 4 புதிய டிசைன் கலெக்ஷன் அறிமுகம்

பண்டிகைக் காலத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 4 புதிய டிசைன் கலெக்ஷன்களை மெலோரா (Melorra அறிமுகப்படுத்தவுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும்D2C பிராண்டில் ஒன்று மெலோரா.

இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா முழுவதும் 26,000+ பின் குறியீடுகளில் டெலிவரி செய்யும் நம்பகத்தன்மை மிக்க நிறுவனமாகும்.

பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை குறிக்கும் வகையில், அதன் நோக்கத்திற்கு உண்மையாக, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் புதிய வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

அந்த புதிய கலெக்ஷனானது தங்கம் மற்றும் வைரத்தில் மொத்தம் 75+ வடிவமைப்புகளைக் கொண்ட தொகுப்பாகும். அதோடு, தனது புதிய பண்டிகை விளம்பர பிரச்சாரமான HarGharMelorra ஐ சமீபத்தில் வெளியிட்டது.

புதிய பெஸ்டிவல் கலெக்ஷனில், பண்டிகைக் காலத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 4 புதிய டிசைன் கலெக்ஷன்களை மெலோரா (Melorra) அறிமுகப்படுத்தவுள்ளது.

தவிர, பிராண்ட் ஆனது 23 அனுபவ மையங்களைக் கொண்டுள்ளது மற்றும் FY ’26-க்குள் இந்தியாவில் 350 அனுபவ மையங்களை உருவாக்கும் இலக்குடன் இயங்கி வருகிறது.

மெலோராவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரோஜா யெரமில்லி பேசும்போது, “பெண்கள் தினசரி அணியும் வகையிலும், அலமாரிகளை வண்ணமயமாக அலங்கரிக்கும் விதத்திலும் இலகுரக தங்க நகைகளுக்கான தேவை அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

எங்கள் பிரச்சாரம், HarGharMelorraஆனது இந்த திசையில் மற்றொரு படியாகும். இது தொலைதூர சந்தைகளுக்குச் சென்றடையவும், மேலும் எங்கள் முழு அளவிலான தயாரிப்புகளின் அணுகலை அதிகரிக்கவும் கைகொடுக்கும்.

பண்டிகை காலமோ அல்லது சாதாரண நாளோ எதுவென்றாலும், எங்களின் டிசைன்கள் உலகளாவிய ஃபேஷன் டிரெண்டுகளால் ஈர்க்கப்பட்டு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற சரியான தேர்வாக இருக்கும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதிய கலெக்ஷனை வெளியிடுகிறோம். மேலும் தங்கம் மற்றும் வைரத்தில் 18000 டிசைன்களை வழங்குகிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img