fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளுக்கு தாய்பால் தான் உணவாகவும், மருந்தாகவும் இருக்கிறது: சண்முகையா எம்எல்ஏ பேச்சு

குழந்தைகளுக்கு தாய்பால் தான் உணவாகவும், மருந்தாகவும் இருக்கிறது: சண்முகையா எம்எல்ஏ பேச்சு

தூத்துக்குடி, மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் 250 கர்ப் பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் தூத்துக்குடி ஊரகம் சார்பில் மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம் மன் கலையரங்கில் நடைபெற்ற ஊட்டச்சத்து மாத சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாப்பிள் ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊரக அலுவலர் திலகா வரவேற் புரையாற்றினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்;ச்சி திட்ட பணிகள் அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவுரையாற்றினார்.

குத்துவிளக்கேற்றி ஒட்டப்பிடா ரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசியதாவது: கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம் தறித்த நாள் முதல் காய்கறி, மீன், முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

6 மாதம் ஆன பின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் தன்மை இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு வளைகாப்பு என்ற நிகழ்ச்சி நடத்தி வளையல் அணிவிக்கப்படுகிறது.

அந்த வளையலின் மூலம் ஜில், ஜில் என்ற சத்தம் வயிற்றில் வளரும் குழந்தை செவித்திறன் மூலம் மகிழ்ச்சியாக வளரும். அந்த கால கட்டத்தில் நீங்கள் நம்முடைய குழந்தைகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர், பொறியாளர் உள்ளிட்ட ஏதோவொரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்வதுடன் அந்த குழந்தையும் அதைநோக்கி செல்லும்.

நல்ல ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையும் உட்கொண்டு ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாப்பதுடன் குழ ந்தை பெற்ற பின் 6 மாத காலம் வரை அதற்கு தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. காரணம் குழந்தைக்கு உணவாகவும் மருந்தாகவும், தாய்ப் பால் இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். பின்னர் 250 பெண்களுக்கு பல்வேறு சீர்வரிசைகளுடன் கூடிய பொருட்களை சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்.

விழாவில் தாசில்தார் செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், வட்டார வளர்ச்சி ஊரக அலுவலர் ராமராஜ், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார மருத்துவ அலு வலர் கார்த்திக், ஆய்வாளர் வில்சன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, தங்க மாரிமுத்து, சேசு, வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ் வரி, பொறியாளர் தளவாய், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், மாப்பிள்ளையூரணி ஊர் தலைவர் ராமமூர்த்தி, தர்மகர்த்தா பெரிய சாமி, அம்பலத்தார் ராமசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கௌதம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்ட னர்.

படிக்க வேண்டும்

spot_img