fbpx
Homeபிற செய்திகள்20 சதவீத போனஸ் கேட்டு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

20 சதவீத போனஸ் கேட்டு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் வாயில் முன்பு தமிழக அரசு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக அறிவித்த 10 சதவீத போனஸ் அறிவிப்பை எதிர்த்து தொழிலாளர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை பொறுப்பாளர் வி.மதுசூதனன் தலைமை தாங்கினார். மின்வாரிய அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளர் ஆர். தமிழ்வாணன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எ.ரங்கநாதன், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் கோவை மண்டலம் சார்பில் மண்டல செயலாளர் கே.பி.சீனிவாசன், கோவை வடக்கு வட்ட செயலாளர் ஏ.முருகவேல், கோவை மாநகர் வட்ட செயல் தலைவர் ஆர். ரவிச்சந்திரன், மாநகர் வட்ட பொருளாளர் ஜி.காமராஜ், மற்றும் வட்ட, கோட்ட, உபகோட்ட பொறுப்பாளர்களும் திரளான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

எந்த ஒரு தொழிற்சங்கத்தோடும் பேச்சு வார்த்தை நடத்தாமல் தமிழக அரசு தன்னிச்சையாக பத்து சதவீத போனஸ் அறிவித்துள்ளது தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனசை அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் வாயிலாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img