fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் ‘ஷிவ் நாடார் ஸ்கூல்’ திறப்பு

சென்னையில் ‘ஷிவ் நாடார் ஸ்கூல்’ திறப்பு

பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள HCL என்ற உலகளாவிய முன்னணி பெரு நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடாரின் அறச்செயல் நடவடிக்கை பிரிவான ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் அதன் பிரபலமான K-12 ஸ்கூல் சங்கிலித்தொடர் சென் னையில் ஷிவ் நாடார் ஸ்கூல் என்ற பெயரில் தொடங்கப்படுகிறது.

பாரம்பரிய மதிப்பீடுகள் மற்றும் கலாச்சாரத்துடன் ஒரு நவீன கண்ணோட்டத்துடன் கூடிய சர்வதேச பள்ளியாக திகழ்வதே இதன் குறிக்கோளாகும். கல்வி செயல்பாடுகள் தொடங்கும் முதல் ஆண் டில் ஏறக்குறைய 150 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் மற்றும் பள்ளிச்சேர்க்கையின் எண் ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும்.

நர்சரி வகுப்பிலிருந்து 4-ம் வகுப்பு வரையிலான புதிய கல்வி அமர்வு 2023 ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றும் இதற்கான பதிவு செயல்முறை விவரங்கள் லீttஜீs://sலீவீஸ்ஸீணீபீணீக்ஷீsநீலீஷீஷீறீ.மீபீu.வீஸீ/நீலீமீஸீஸீணீவீ/ என்ற இணைய தளத்தில் கிடைக்கப் பெறுகின்றன.

ஷிவ் நாடார் பள்ளியின் தலைவரும், ஷிவ் நாடார் ஃபவுண்டேஷனின் அறங் காவலருமான ஷிக்கர் மல் ஹோத்ரா கூறியதாவது:
எதிர்கால தலைமுறைகளுக்கு ஆக்கப்பூர்வ தாக்கத்தைத் தொடர்ந்து வழங்குகிறவாறு கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற ‘ஆக்கப் பூர்வ அறச்செயல்’ (Creative Philanthropy) என்ற கோட்பாட்டை ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

சென்னை மாந கரில் உயர்கல்விக்கான இரு கல்வி நிறுவனங்களை ஏற்கனவே தொடங்கி சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். எனவே, K-12ம் வகுப்பு வரையிலான கற்றல் பயணத்தை ஒருங் கிணைப்பதில் இதுவொரு இயற்கையான படி நிலையாகவே இருக்கிறது.

டெல்லி-என்சிஆர் பகு தியில் மூன்று ஷிவ் நாடார் பள்ளிகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்திவரும் நிலையில் சென்னை மாநகரில் அதன் நான்காவது பள் ளியை தொடங்குவது பெருமிதத்தையும் உற்சாகத்தையும் தருகிறது என்றார்.

ஷிவ் நாடார் பள்ளியின் தலைமை செயல் அலுவலர் கர்னல் கோபால் கருணாகரன் (ஓய்வு) பேசியதாவது: முழுமையான கற்றல் அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குவோம்.

கல்விசார்ந்த நேர்த்தி நிலையானது, இசை, நாடகம், நடனம், காட்சி கலை போன்ற கலைகளின் செயலாக்கம், விளையாட்டில் நேர்த்தி, பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் மற்றும் செயல்திட்ட அடிப்படையிலான கற்றல் மற்றும் தலைமைத்துவ பண்பு ஆகியவற்றோடு ஒருங்கிணைக்கப்படும் அமை விடமாக இப்பள்ளி செயல்படும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img