fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி ரோச் பூங்காவிற்கு பதிலாக மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் குருஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம்‌

தூத்துக்குடி ரோச் பூங்காவிற்கு பதிலாக மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் குருஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம்‌

தூத்துக்குடியில் மக்கள் அதிகமாக புழங்கும் முக்கியமான இடத்தில் குருஸ் பர்னாந்துக்கு சிலை அமைத்து, உரிய மரியாதை அளிக்குமாறு, அன்னை பரதர் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி பரதர் நல தலைமை சங்க நிர்வாகிகள் நேற்று (செவ்வாய்கிழமை) தலைமைச் சங்க அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சங்க தலைவர் ரெனால்டு வி.ராயர், பொதுச் செயலாளர் அந்தோணிசாமி பர்னாந்து, பொருளாளர் காஸ்ட்ரோ பர்னாந்து ஆகியோர் கூறியதாவது:

இணைய ஊடகங்களில்‌ ஐயா ராவ்‌ பகதூர்‌ குருஸ்‌ பர்னாந்துக்கு ரோச்‌ பூங்கா அருகில்‌ ரூ. 77.87 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மணிமண் டபம்‌ அமைக்க விரைவில்‌ பணிகளை துவக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர்‌ அறிவித்ததாக நேற்று (திங்கட் கிழமை) செய்திகள்‌ வெளிவந்தன.

ஏற்கனவே, பல முறை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ அமைச்சர்‌ கீதாஜீவன்‌ ஆகியோரை சந்தித்து ரோச் பூங்காவுக்கு பதில் மக்கள் அதிகம் புழங்கும் வேறு இடத்தில் மணிமண்டபம்‌ அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தும்‌, பரத குல மக்களின்‌ மன உணர்வுகளை புறக் கணித்து, இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியும்‌, மன வேதனையையும்‌ தருகின்றது.

தூத்துக்குடி மாநகரை அடிப்படை கட்டமைப்புகளோடு உருவாக்குவதில்‌ மிகப்பெரும்‌ பங்கு வகித்து, தூர்த்து தூர்த்து தண்ணீரை குடித்து வந்த தூத்துக்குடி மக்களுக்கு அன்றே தூய குடிநீரை குடிக்க தந்தவரும், வணிக சந்தை, சுகாதார மையங்கள்‌, பொது மய்யவாடி போன்றவற்றை தொலைநோக்கு பார்வையோடு அமைத்து தந்தவரும், ‘தூத்துக்குடி மாநகர தந்தை’ என அனைவராலும்‌ போற்றப்படுகின்றவருமான ராவ்‌ பகதூர்‌ குருஸ்‌ பர்னாந் துக்கு மணிமண்டபம்‌ கட்ட விருப்பமில்லாமல்‌, இப்படி அறிவித்தால்‌ மக்கள்‌, வேண்டா மென போராடுவார்கள்‌, அதை காரணம்‌ காட்டி பணிகளை நிறுத்தி விடலாம்‌ என்று நினைக் கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஏற்கனவே மச்சாது பூங்கா, நேரு பூங்காவாக மாற்றப்பட்டு உள்ளதை நிவர்த்திக்க பலமுறை நேரிடையாகவும்‌ மனு மூலமாகவும்‌ மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம்‌ மனு கொடுத்தும்‌ இன்று வரை பதிலில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்‌ ரோச்‌ பூங்காவில்‌ காந்தி சிலை வைக்க முற்பட்ட போது, அதை போராடி தடுத்தோம்‌. ஆனால்‌ அன்றிலிருந்து இன்று வரை சரியான பராமரிப்பின்றி மக்கள்‌ பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையிலேயே, ஏன்‌ சரியான மின்‌ விளக்குகள்‌ கூட சரிவர எரியவிடப்படாமல்‌ அப்பூங்காவை வைத்துள்ளனர்‌.

சிலையோ காண்பதற்கு அருவறுப்பை தரும் அளவுக்கு பராமரிப்பின்றி கிடக்கின்றது. தற்போது மாநகரின்‌ பல்வேறு இடங்களில்‌, சிறிய அளவில்‌ இருந்த பல பூங்காக்கள்‌ பளபளப்பாக்கப்பட்டு, நவீனமாக்கப்பட்டு உள்ளது. ஆனால்‌ ரோச்‌ பூங்காவிற்கு ஒரு பைசா செலவு செய்யப்படவில்லை மாற்றாந்தாய்‌ மனப்பான்மையுடன்‌ நிர்வாகம்‌ செயல்படுவதற்கு இது ஒரு சான்று.

இந்நிலையில், தற்போது ரோச்‌ பூங்காவில்‌ குருஸ்‌ பர்னாந்துக்கும்‌ மணிமண்டபம்‌ என்ற அறிவிப்பின்‌ மூலம்‌ எங்கள் இன அடையா ளங்களை அழிக்கும் துவக்க முயற்சியாகவே எங்களுக்கு தெரிகின்றது.

தூத்துக்குடி மாந கரில்‌ பெரும்பான்மையாக வாழக்‌கூடிய எம்‌ மக்களில்‌, ஆளும்‌ கட்சியிலேயே தகுதியான பலர்‌ இருந்தும்‌, ஒருவர்‌ கூட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படவில்லை என மன புழுக்கத்தில்‌ இருக்கும்‌ எம்‌ மக்களை இந்த அறிவிப்பு மென் மேலும்‌ புறக்கணிப்பதாகவே உணர்கிறோம்‌. இது வருகின்ற தேர்தல்களில்‌ கண்டிப்பாக எதி ரொலிக்கும்‌.

எங்கள்‌ குற்றச்சாட்டுகளில்‌ உண்மை இல்லை என்றால்‌ எளிமையானதும்‌, நிறைவேற்றத தக்கதுமான எங்கள்‌ கோரிக் கைகளை உடனடியாக நிறை வேற்றி இவ்வாண்டு நவம்பர்‌ 15ல்‌ ஐயா ராவ்‌ பகதூர்‌ குருஸ் பர்னாந்து அவர்களின்‌ பிறந்த நாளை உளமகிழ்வோடு மக்கள்‌ கொண்டாடும்‌ வகையில்‌, தற்போது சிலை இருக்குமிடத்தை இன்றைய சூழலுக்கேற்ப அழகுபடுத்தி, பள்ளத்தில்‌ இருக்கும்‌ சிலையை உயர்த்தி அமைப்பதோடு, மக்கள்‌ மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக விரிவான அளவில்‌ படிக்கட்டுகள்‌ அமைத்து பராமரிக்க வேண்டும்‌.

நகரின்‌ ஒதுக்குப்புறமான இடத்தில்‌ மணிமண்டபம்‌ அமைத்து தன்னலமற்ற அப்பெருமகனாரை அவமதிப்பதை தவிர்த்து, மக்கள்‌ அதிகமாக புழங்கும்‌ இடத்தில்‌ சிறப்பாக அமைத்து தந்து, அவரது நினைவு என்றென்றும்‌ போற்றப்பட ஆவன செய்யப்பட வேண்டும்‌ என மீண்டும்‌ கோரிக்கையாக வைக்கிறோம்.

உடனடியாக தகுந்த பதிலளிக்கப்படாவிட்டால்‌ அனைத்து அமைப்புகளையும்‌, பொதுமக்களையும்‌ திரட்டி அறவழியில்‌ தொடர்‌ போராட் டங்கள்‌ மேற்கொள்வோம் என்ப தையும்‌ இதன்‌ மூலம்‌ தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img