fbpx
Homeபிற செய்திகள்கோவை ஜெ.எஸ்.எஸ். மருத்துவமனையில் புதிய மாணவ மாணவியர் தங்கும் விடுதி கட்டிடங்கள் வருகிற 28-ந்தேதி திறப்பு...

கோவை ஜெ.எஸ்.எஸ். மருத்துவமனையில் புதிய மாணவ மாணவியர் தங்கும் விடுதி கட்டிடங்கள் வருகிற 28-ந்தேதி திறப்பு விழா

கோவை பாலக்காடு ரோடு நவக்கரையில் உள்ளது, ஜெ.எஸ்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை.

இங்கு புதிதாக மாணவ மாணவியர் தங்கும் விடுதி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 28-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு புதிய விடுதி கட்டிடங்களை திறந்துவைத்து பேசுகிறார்.

விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

விழாவுக்கு ஜகத்குரு வீர சிம்மாசனமஹா சமஸ்தான மடத்தின் 24-வது மடாதிபதி ஜகத்குரு சிவராத்திரி தேஷிகேந்திர மஹாஸ்வாமிஜி முன்னிலை வகிக்கிறார்.
இதுகுறித்து ஜெ.எஸ்.எஸ்.கல்லூரி முதல்வர் மற்றும் தலைமை மருத் துவ அலுவலர் டாக்டர் வீ.ஆர்.திலிப், இயக்குனர் மகேஷ் மற்றும், புட்டு ராஜ், சண்முகம் ஆகியோர் கூறியதாவது:-

இந்த புதிய மாணவர் விடுதி ரூ.30 கோடியில் கட்டப்பட்டு உள்ளது. 500 மாணவிகள் தங்ககூடிய கட்டிடம் 79000 சதுர அடியிலும் 200 மாணவர்கள் தங்ககூடிய கட்டிடம் 33000 சதுர அடியிலும் கட்டப்பட்டு உள்ளது.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img