fbpx
Homeபிற செய்திகள்வடகிழக்குப் பருவமழை தீவிரம்: ஒன்றரை லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன‌- அமைச்சர்...

வடகிழக்குப் பருவமழை தீவிரம்: ஒன்றரை லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன‌- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை மாநகராட்சி 63 வது வார்டில் உள் ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பொதுமக்கள் தங்களது குறை சம்பந்தமான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது

கோவையில் கடந்த ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் ரூ.211 கோடியில் சாலை பணி கள் தொடங்கப்பட்டு சில இடங்களில் முடிக்கப்பட் டுள்ளது. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சிறப்பு நிதியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில்ரூ. 26 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு வருகிறது. மீதமுள்ள பழுதடைந்த சாலைகளும் சீர மைக்கப்படும்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது-. ஒன்றரை லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன‌.

சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரியம் பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன் னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

ஈஸ்வரன் கோவிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்ததை விட, கோமாளித்தனம் வேறு இல்லை. கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்பதை தவிர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர்மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் முன்னாள் எம்பி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img