fbpx
Homeபிற செய்திகள்ரோஹித், ராகுலுடன் ‘மை ஷாப் மை ஆட்’ பாரத்பே புதிய பிரச்சாரம்

ரோஹித், ராகுலுடன் ‘மை ஷாப் மை ஆட்’ பாரத்பே புதிய பிரச்சாரம்

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றான ‘பாரத்பே’, ‘மை ஷாப் மை ஆட்’ என்ற புதிய மற்றும் ஒரு வகையான சந்தைப்படுத்தல் பிரசாரத்தை தொடங்குவதாக அறிவித்தது.

இந்தியாவில் ஃபின்டெக் துறையில் இந்த முதல் பிரசாரம், பாரத்பேயின் மில்லியன் கணக்கான ஆஃப்லைன் வணிகர்களுக்கு, இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா அல்லது கே.எல்.ராகுலை கொண்ட அவர்களின் சொந்த வீடியோ விளம்பரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இந்த சலுகைக் கான தொழில்நுட்ப தளத்தை உருவாக்க ‘பாரத்பே’ Rephrase.ai உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த விளம்பரத்தை உருவாக்கும் செயல்முறை எளிதானது.

கடை உரிமையாளர்கள் 3 எளிய வழிமுறைகளை பின்பற்றி, பாரத்பே செயலி மூலம் தங்கள் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை உருவாக்கலாம்.

வணிகர்கள் பாரத்பே செயலியில் சென்று ‘மை ஷாப் மை ஆட்’ பகுதியை பார்வையிடலாம். அவர்கள் கடையின் பெயர், தொடர்பு எண், வணிக வகை போன்ற வணிக விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதை பதிவிட, அவர்கள் தங்கள் கடை முகப்பின் படத்தை போர்ட்ரெய்ட் முறையில் பதிவேற்ற வேண்டும். தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரம் உருவாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் வணிகர்களுக்கு வழங்கப்படும்.

இந்த புதிய பிரசாரத்தை தொடங்கி வைத்து, ‘பாரத்பே’-ன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பார்த் ஜோஷி பேசியதாவது: ‘மை ஷாப் மை ஆட்’ பிரசாரத்தை அறிவிப் பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த முன்முயற்சியானது பக்கத்தில் உள்ள சில்லறை விற்பனை கடை உரி¬ மயாளர்கள் பிரபல கிரிக்கெட் வீரர்க ளுடன் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை உருவாக்கி அதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை தங்கள் கடைகளுக்கு ஈர்க்க முடியும் என்றார்.

‘ஃபின்டெக் துறையில் ஒரு முன்னோடியான பாரத்பே உடன் பணிபுரிவது Rephrase.ai க்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.

பாரத்பே-ன் 10 மில்லியன் கடை உரிமையாளர்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோரின் டிஜிட்டல் அவதாரங்களுடன் கடைகளின் விளம்பரங்களை உருவாக்குவார்கள் என்று Rephrase.ai தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் அஷ்ரே மல்ஹோத்ரா தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img