fbpx
Homeபிற செய்திகள்வீராணம் ஏரி உபரி நீர் வெளியேற்றம்

வீராணம் ஏரி உபரி நீர் வெளியேற்றம்

தொடர் மழையால் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையில், வெள்ளியங்கால் ஓடை வழியாக நேற்று (நவ.3) முதல் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. காட்டுமன்னார்கோயில் பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழணையில் உச்ச நீர்மட்டமான 9 அடியில் 8.6 அடி வரை தண்ணீர் உள்ளது.

அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 294 கன அடி நீரும்,வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 92 கன அடி நீரும், தெற்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 229 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 3,640 கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது. காட்டுமன்னார்கோயில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஏரியின் உச்சநீர் மட்டமான 47.50 அடியில் 46 அடி வரை தண்ணீர் உள்ளது.
அதாவது ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 1,100 மில்லியன் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரியிலிருந்து வி.என்.எஸ். மதகு வழியாக விநாடிக்கு 375 கன அடி நீரும், பாசனத் தேவைக்கு விநாடிக்கு 121 கன அடி நீரும் சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவைக்கு விநாடிக்கு 64 கன அடி நீரும் அனுப்பப்படுகிறது.

ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீரானது விநாடிக்கு 500 கன அடி வீதம் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img