fbpx
Homeபிற செய்திகள்பிஏபி திட்டப்பணிகளின்போது விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவு மண்டபம் - ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர்...

பிஏபி திட்டப்பணிகளின்போது விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவு மண்டபம் – ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர் தகவல்

பி.ஏ.பி திட்டப்‌ பணிகள்‌ நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் ‌உயிர்‌ நீத்தவர்களுக்கான நினைவு மண்டபம்‌ அமைத்திட ரூ.1 கோடி மற்றும்‌ பொள்ளாச்சியில்‌ செயல்படும்‌ நீர்வளத்‌ துறையின்‌ தலைமைப்‌ பொறியாளர்‌ அலுவலக வளாகத்தில்‌ இரண்டு அடுக்குகள் கொண்ட அரங்கம், மேனாள்‌ சட்ட மன்ற உறுப்பினர்‌, வி.கே.பழனிசாமி கவுண்டர்‌, ஒன்றிய அரசின் முன்னாள்‌ அமைச்சர்‌ சி. சுப்பிரமணியம்‌, மேனாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌, ‌ தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு சிலை அமைத்திட செலவினத்தொகை ரூ.4.28 கோடி என மொத்தம்‌ ரூ.5.28கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும்‌ நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 06.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றப்‌ பேரவைக்‌ கூட்டத்‌ தொடரில்‌, 2021-2022-ம்‌ ஆண்டிற்கான செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ மானியக்‌ கோரிக்கையின்‌ போது, பரம்பிக்குளம்‌ ஆழியாறு பாசனத்‌ திட்டம்‌ உருவாக முக்கியக்‌ காரணமாக இருந்தவர்களில்‌ ஒருவரான வி.கே. பழனிசாமி கவுண்டருக்கு ஆழியாறு அணையின்‌ பூங்காவில்‌ நினைவு மண்டபம்‌ மற்றும்‌ மார்பளவுச்சிலை அமைக் கும்‌ பணிகள்‌ ரூ.1கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வருகிறது. இதனை பி.ஏ.பி. திட்டப் பணிகள்‌ நடை பெற்றபோது ஏற்பட்ட விபத்தில்‌ உயிர்‌ நீத்தவர்களுக்கான நினைவு மண்டபமாக மாற்றி அமைக்கப்படும்‌.

பொள்ளாச்சியில்‌ செயல் படும்‌ நீர்வளத்‌ துறையின்‌ தலைமைப்‌ பொறியாளர்‌ அலுவலக வளாகத்திற்கு ஒன்றிய அரசின்‌ மறைந்த முன்னாள் ‌அமைச்சர் ‘சி. சுப்பிரமணியம்‌ வளாகம்’ என்று பெயர்‌ சூட்டப்படும்‌.

இவ்வளாகத்தில்‌, விவசாயப்‌ பெருமக்களுக்குப்‌ பயிற்சிகள்‌ மற்றும்‌ கருத்த ரங்கம்‌ போன்ற நிகழ்ச்சிகள்‌ நடத்திட ஏதுவாக ரூ.4கோடி மதிப்பீட்டில்‌ இரண்டு அடுக்குகள்‌ கொண்ட புதிய அரங்கு கட்டமைக்கப்படும்‌. இவ்வரங்கத்திற்கு ‘வி.கே. பழனிசாமி அரங்கம்’ என பெயர்‌ சூட்டப்படும்‌.

மேல் தளத்தில்‌ அமைக்கப்படும்‌ அரங்கத்திற்கு ‘பொள்ளாச்சி நா. மகாலிங்கம்’ பெயர்‌ சூட்டப்படும்‌.

நா.மகாலிங்கம் சிலை
இம்மண்டபத்தில்‌ பரம்பிக்குளம்‌ ஆழியாறுத்‌ திட்டப்பணிகள்‌ குறித்துப்‌ பொதுமக்கள்‌ அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ புகைப்படக்‌ கண்காட்சி அமைக்கப்படும்‌.

இவ்வளாகத்தில்‌ மேனாள்‌ சட்டமன்ற உறுப்பினர் ‌வி.கே.பழனிசாமி கவுண்டர்‌, முன்னாள்‌ அமைச்சர்‌ சி.சுப்பிரமணியம்‌, மேனாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மற்றும் தொழிலதிபர்‌ பொள்ளாச்சி நா.மகா லிங்கம்‌, ஆகியோரைப்‌ பெருமைப்படுத்துகின்ற வகையில்‌, அன்னார்களது திருவுருவச்‌ சிலைகள்‌ அமைக்க ரூ.30 லட்சம்‌ என மொத்தம்‌ ரூ.4.30 கோடி ‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌ என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

பொள்ளாச்சி நீர்வளத் துறை தலைமைப்‌ பொறியா ளர்‌ அலுவலக வளாகத்தின்‌ தென்மேற்கு மூலையில்‌ 1.25 ஏக்கர்‌ பரப்பளவில்‌ பொள் ளாச்சி வட்டம்‌, சின்னாம் பாளையம்‌ கிராமம்‌, புல எண்‌.45/2-ல்‌ 1.95.00 ஹெக்டேர்‌ விஸ்தீரணமுள்ள பூமியானது, அரசு புறம்போக்கு என்ற வகைப் பாட்டில்‌ உள்ள புலத்தில்‌ வி.கே.பழனிசாமி அரங்கம்,‌ மேனாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ வி.கே.பழனிசாமி கவுண்டர்‌, ஒன்றிய அரசின்‌ மேனாள்‌ அமைச்சர்‌ சி.சுப்பிரமணியம்‌, மேனாள்‌ சட்டமன்ற உறுப்பினரும்‌ தொழிலதிபருமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம்‌, ஆகியோருக்கு திருவுருவச்‌ சிலைகள் அமைக்கப்படவுள்ளன.

அரசின்‌ கவனமான பரிசீலனைக்குப்‌ பின்னர்‌, செய்தித்‌ துறை அமைச்சரின்‌ அறிவிப்பினைசெயல் படுத்திடும்‌ பொருட்டு, அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. தற்போது கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும்‌ வி.கே. பழனிசாமி மணிமண் டபத்தினை பி.ஏ.பி. திட்டப்‌ பணிகள்‌ நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில்‌ உயிர்‌ நீத்தவர்களுக்கான நினைவு மண்டபமாக மாற்றி அமைத்திட திருத்தியமைக் கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.1 கோடி நிர்வாக அனுமதி மற்றும்‌ நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

“சி.சுப்பிரமணியம்‌ வளாகம்‌”
பொள்ளாச்சியில்‌ செயல்படும்‌ நீர்வளத்‌ துறையின்‌ தலைமைப்‌ பொறியாளர்‌ அலுவலக வளாகத்திற்கு ஒன்றிய அரசின்‌ மறைந்த முன்னாள்‌ அமைச்சர்‌ “சி.சுப்பி ரமணியம்‌ வளாகம்‌” என்று பெயர்‌ சூட்டப்படுகிறது.

மேற்படி வளாகத்தில்‌ விவசாயப்‌ பெரு மக்களுக்குப்‌ பயிற்சிகள்‌ மற்றும்‌ கருத்தரங்கம்‌ போன்ற நிகழ்ச்சிகள்‌ நடத்திட ஏதுவாக இரண்டு அடுக்குகள்‌ கொண்ட புதிய அரங்கு கட்டமைக்கப்பட்டு, இவ்வரங்கத்திற்கு ‘வி.கே.பழனிசாமி அரங்கம்’ என பெயர்‌ சூட்டவும்‌, மேல்தளத்தில்‌ அமைக்கப்படும்‌ அரங்கத்திற்கு ‘பொள்ளாச்சி நா. மகாலிங்கம்’ பெயர்‌ சூட்டவும்‌, மற்றும்‌ இவ்வளாகத்தில்‌ மேனாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌, வி.கே.பழனிசாமி கவுண்டர்‌, ஒன்றிய அரசின் முன்னாள்‌ அமைச்சர்‌ சி. சுப்பிரமணியம்‌, மேனாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌, ‌ தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், ஆகியோருக்கு திருவுருவச்‌ சிலை அமைத்திட நிர்வாக அனுமதியும்‌, இப்பணிகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.4,28,71,010-க்கு நிதி ஒப்பளிப்பும்‌ செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img