அன்னபூர்ணா மசாலா வழங்கும் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி கோவையில் வருகிற நவம்பர் 27ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. மாலை 6 மணி அளவில் துவங்கும் இந்த கச்சேரி சுமார் 3 மணி நேரம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சித் ஸ்ரீராமுடன் அவரின் இசை குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரம் சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட உள்ளது.
இம்முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி ஆடும் ‘பேன் பிட்’ இடம்பெறுகிறது. சுமார் 10,000 பேர் நிற்க கூடிய வகையில் அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதனால் ரசிகர்களுடன் சித் ஸ்ரீராம் உரையாடல் இருக்கும்.
இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்வு குறித்து சித் ஸ்ரீராம் பேசிய ப்ரோமோ வீடியோ வெளியீடு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த கச்சேரிக்கான டிக்கெட்டுகள் (PAYTM INSIDER, BOOK MY SHOW, VMR GROBUX, ரோட்டரி கேலக்ஸி சங்கத்தில் கிடைக்கும். அத்துடன் அன்னபூர்ணா ஆனந்தாஸ் ஆகிய பிரபல உணவகங்களில் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்வு நடைபெறும் கொடிசியா வளாகத்திலும் கவுன்டர்கள் இடம்பெறும். அங்கும் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ரூ. 500 முதல் ரூ. 25,000 வரை டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
அருண் ஈவென்ட்ஸ், வி 2 கிரியேஷன்ஸ் மற்றும் வீ.எம்.ஆர் குரோபக்ஸ் ஒருங்கிணைத்து நிகழ்வை நடத்துகின்றனர்.
டிக்கெட் தொடர்புக்கு : 0422 3501888, 9787100711, 9787800711 என்ற எண்களை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.