ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், வெளிநாட்டு பாலிசிதாரர்களுக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கோட்ட பொறியாளர் சந்திர சேகர் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சண்முகம், நடராஜன் ஜெயக்குமார் உட்பட ஆயுள் காப்பீட்டு முகவர்கள் கலந்து கொண்டனர்.