fbpx
Homeபிற செய்திகள்சி.எம்.எஸ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சி.எம்.எஸ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை சி.எம்.எஸ். அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

சந்திப்பு நிகழ்ச்சி

கோவை, சி.எம்.எஸ். அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 1992&95ம் ஆண்டில் பி.காம்., பி.பி.எம்., பி.எஸ்.சி. கணிப்பொறி அறிவியல் ஆகிய பிரிவுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

முன்னாள் மாணவர் பி.ரகுராம் வரவேற்றார். துணை முதல்வர் வி.சுஜாதா தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் ரகுராம், சிவானந்தன், பெரியசாமி, சத்யமூர்த்தி, அன்னபூரணி, சத்ய நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது வேலை, குடும்பம் குறித்து பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img