fbpx
Homeபிற செய்திகள்சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

“சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்புகளை வழங்க வேண்டும், உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், முத்தரப்பு குழுக்களை அமைத்திட வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஓய்வூதியம் 3,000-த்தை உடனடியாக வழங்க வேண்டும்.

பென்ஷன்

பென்ஷன் பெரும் வயதை 55 ஆக மாற்றிட வேண்டும், தமிழக அரசு டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்கு கூலி உயர்த்தி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ரயில்வே கூட்செட்டில் பணிபுரியும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ரயில்வேயில் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு குடிநீர், குளியல் அறை அடையாள அட்டை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மளிகை மார்க்கெட்டில் வேலை செய்யும் சுமை பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்“ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img