fbpx
Homeபிற செய்திகள்அனுமதியின்றி யாருடைய நிலமும் கையகப்படுத்தபட மாட்டாது- ஆ.ராசா எம்.பி. உறுதி

அனுமதியின்றி யாருடைய நிலமும் கையகப்படுத்தபட மாட்டாது- ஆ.ராசா எம்.பி. உறுதி

டிட்கோ தொழிற்பூங்காவுக்காக யாருடைய விவசாய நிலத்தையும் தமிழக அரசு கையகபடுத்தவில்லை என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

டிட்கோ தொழிற்பூங்கா

கோவையில் அமையவுள்ள டிட்கோ தொழிற்பூங்காவுக்காக விவசாய நிலங்கள் கையகப் படுத்தப்படுவதாக கேள்வி எழுந்தது. இதற்காக சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக திமுக எம்பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அதில், யாருடைய விவசாய நிலத்தையும் தமிழக அரசு கையகபடுத்தவில்லை. அதற்கான அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறினார்.

விவசாய நிலங்களை அவர்கள் அனுமதியின்றி கையகப்படுத்துவது போன்று சிலர் கூறுகிறார்கள் அது தவறு. மக்கள் அனுமதியின்றி நிலம் கையகப்படுத்தப்படாது. இங்கு அமைய உள்ளது விமான பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தான்.

நீர், காற்று மாசுபடுத்தும் தொழிற்சாலை இங்கு வரவில்லை. கோவை மக்கள் மேம்பாட்டுக்கு தான் அரசு முயற்சிகள் செய்யும். என விளக்கம் அளித்தார் திமுக எம்பி ஆ.ராசா.

படிக்க வேண்டும்

spot_img