கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 83க்குட்பட்ட கடலைக்கார சந்து பகுதியில் உள்ள மாநகராட்சி இடத்தில் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ.140 லட்சம் மதிப்பீட்டில் வீடற்ற ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டுமானப்பணியினை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
உடன் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர் சுமா, உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ், உதவி செற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.