fbpx
Homeபிற செய்திகள்இயல்பைவிட கூடுதலாக பருவ மழை பதிவு: தருமபுரி மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள் நிரம்பின

இயல்பைவிட கூடுதலாக பருவ மழை பதிவு: தருமபுரி மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள் நிரம்பின

தருமபுரி நகராட்சி, மதிகோண் பாளையம் அருகில் உள்ள இராமக்காள் ஏரியினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேற்று (டிச.15) செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்ª காண்டார்.

மாவட்ட ஆட்சியர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது.
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர்வளத்றையின் கட்டுப்பாட்டில் உள்ள இராமக்காள் ஏரி, தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது.

202 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நிரம்பியதால், சுமார் 265 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அரசு பொது மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு போதிய அளவிலான நீர் கிடைத்திட பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை காலத்திற்கான இயல்பான மழையளவு 361.00 மி.மீ ஆகும். நடப்பாண்டு 576.69 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை காலத்தில் இயல்பான மழையளவை விட 215.69 மி.மீ கூடுதலாக மழை பெய்துள்ளது.

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குட்பட்ட தற்போதைய வட கிழக்கு பருவ மழை காலத்திற்கான இயல்பான சராசரி மழையளவு 316.70 மி.மீ. நடப்பாண்டு அக்டோபர் மாதம் முதல் இன்றைய தினம் (டிச.15) வரை 344.96 மி.மீ மழை பெய்துள்ளது.

தருமபுரி மாவட்டம் விவசாயத் திற்கு உகந்த மண் வளம் நிறைந்த மாவட்டமாகும்.
இயல்பு அளவை விட கூடுதலாக பருவமழை பெய்துள்ளதால் மண் வளத்தைபயன்படுத்தி, பயிர் சாகுபடி செய்து, விவசாயிகள் அதிகளவில் மகசூல் பெறுவதற் கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ஊராட் சிகள் கட்டுப்பாட்டில் 546 ஏரிகள், பேரூராட்சிகள் துறையின் கீழ் 14 ஏரிகளும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மற்றும் தருமபுரி வடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டில் 74 ஏரிகள் என மொத்தம் 634 ஏரிகள் உள்ளன.

நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சின்னாறு அணை, தொப்பையாறு அணை, கேசர்குளி அல்லா அணை, தும்பலஅள்ளி அணை, நாகாவதி அணை, வரட் டாறு அணை, வாணியாறு அணை ஆகிய 7 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

ஏரிகள் புனரமைத்தல் மற்றும் ஏரிகளின் வரத்து வாய் கால்கள் உள்ளிட்டவற்றை முறை யாக தூர்வாரி வைத்ததன் விளைவாக, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங் களில் நீர் நிரம்பி உள்ளன.

பொதுப்பணித்துறை நீர்வளத் துறை மற்றும் தருமபுரி வடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டில் 74 ஏரிகளில் 35 ஏரிகள் தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது. மேலும், 10 ஏரிகள் 80 சதவீதமும், 14 ஏரிகள் 50 சதவீதத்திற்கு இணை யாகவும் நீர் நிரம்பியுள்ளது.

ரூ.5 கோடியில் புனரமைப்பு

நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ஏரி புனரமைத்தல் திட் டத்தின் கீழ்ரூ.5 கோடி மதிப் பீட்டில் காரிமங்கலம் திண்டல் ஏரி, பென்னாகரம் வரட்டுபள்ளம் ஏரி, அரூர் பெரிய ஏரி, பாலக்கோடு தொப்பைபள்ளம் ஏரி, பாப்பிரெட்டிப்பட்டி வாச்சாத்தி ஏரி மற்றும் ஆலாபுரம் ஏரி ஆகிய 6 ஏரிகளில் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் பாலக்கோட்டில் தடுப்பணை கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களால் குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிகளுக்கு போதியளவில் நீர் கிடைத்திட வழிவகை ஏற்பட் டுள்ளது என்றார் மாவட்ட ஆட் சியர் கி.சாந்தி.

ஆய்வில், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நீர்வள ஆதாரத்துறை உதவிப் பொறியாளர் மாலதி, நகராட்சி பொறியாளர் இரா.ஜெயசீலன், தருமபுரி வட்டாட்சியர் தன.ராஜராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img