புதுடெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ காம்போனென்ட் கண்காட்சியில், நிறுவனத்தின் புதுமையான மற்றும் நிலையான தயாரிப்புகள் எவ்வாறு ஈ-மொபிலிட்டிக்கு மாற்றம் அடைந்து OEவிக்கு உதவுகின்றன என்பதை போர்க் வார்னர் விளக்க உள்ளது.
பேட்டரி அமைப்புகள், சார்ஜிங் நிலையங்கள், மின்சார மோட்டார்கள், ஒருங்கிணைந்த டிரைவ் மாட்யூல்கள், பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உயர் மின்னழுத்த குளிரூட்டும் ஹீட்டர் போன்ற உயர் செயல்திறன் கொண்ட வெப்ப மேலாண்மை தயாரிப் புகள் உள்ளிட்ட வாகன மின்மயமாக்கலை ஆதரிக்கும் பரந்த அளவிலான தொழில்நுட்பங்களை ஹால் A4FF, பூத்C27-ல் நிறுவனம் காட்சிப்படுத்த உள்ளது.
போர்கவார்னர் எமிஷன்ஸ் சிஸ்டம்ஸ் இந்தியா பி.லிட். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதர்சாவ்லா கூறியதாவது: போர்க்வார்னரின் தயாரிப்புகள் மற்றும் அமைப்புசார் தீர்வுகளை முன்னிலைப்படுத்தவும், மின் மயமாக்கல் முயற்சிகளை விரைவுபடுத்துவதையும் 2035-ம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலையை அடைவதை நோக்கமாகக் கொண்ட சார்ஜிங் ஃபார்வார்டு எனும் உலகளாவிலய நிறுவன உத்தியைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கவும் ஆட்டோ எக்ஸ்போ ஒரு சிறந்த தளமாகும்.
இந்தியாவில் உள்ள போர்க்வார்னர் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகள் இந்த முயற்சியின் கீழ் வரையறுக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பாரத் ஸ்டேஜ் சிக்ஸ்
இது பாரத் ஸ்டேஜ் சிக்ஸ் போன்ற கடுமையான இந்திய உமிழ்வு தர நிலைகளை பூர்த்தி செய்வதில் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது என்றார்.
போர்க்வார்னரின் பூத்தில் காண்பிக்கப்படும் தயாரிப்பு சிறப்பம்சங்களில், இலகுவான மின்சார வணிக வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் அடிப்பகுதிக்கு ஏற்றவாறு புதிய பிளாட் மாட்யூல் கட்டமைப்பைக் கொண்ட உயர் ஆற்றல் கொண்ட பேட்டரி அமைப்பு ஆகியவை அடங்கும்.
ஒரு புதிய, மாடுலர் உயர் மின்னழுத்த இ-ஃபேன் தீர்வு மற்றும் போர்க்வார்னரில் சமீபத்திய தலைமுறை இன்வெர்ட்டர்களும் இதில் இடம்பெறும். புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஆட்டோ எக்ஸ்போ காம்போனென்ட் கண்காட்சி வரும் ஜன.12 முதல் 15-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தியாவின் வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியன இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.