பெரியார் பல்கலைக் கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகள், ஓசூர், எம் ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றன.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 26 அணிகள் இப்போட்டிகளில் பங்கு பெற்றன. அரை இறுதிச்சுற்றில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணியும், சேலம் -7, அரசு கலைக் கல்லூரி அணியினரும் விளையாடினர்.
இப்போட்டியில் 3&-0 என்ற கோல்கணக்கில் தருமபுரி, தொன்போஸ்கோ கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி அணியுடன், சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி அணியினர் விளையாடினர்.
சென்னை சலேசிய மாநிலத் தலைவர்
இப்போட்டியில் 3&-1 என்ற கோல்கணக்கில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணி முதல் இடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது. இதனையொட்டி கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு சென்னை சலேசிய மாநிலத் தலைவர் அருட்தந்தை கே.எம். ஜோஸ் தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தனிநபர் கோப்பை மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பேராசிரியர் ம.சேவியர்டெனிஸ் ஆகியோரை கல்லூரிச் செயலர் அருட்தந்தை முனைவர் எட்வின் ஜார்ஜ், முதல்வர் அருட்தந்தை முனைவர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் அருட்தந்தை முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அருட்தந்தை ஜான் , சமூகப்பணித்துறைப் பேராசிரியர் அருட்தந்தை ஆண்டனி கிஷோர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.