fbpx
Homeபிற செய்திகள்7 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்- ஆயர் ஸ்டீபன் நடத்திவைத்தார்

7 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்- ஆயர் ஸ்டீபன் நடத்திவைத்தார்

தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையம் சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சுயம்வரம் நடந்தது.

இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர். பின்னர் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி ஏழு ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர், தேர்வு செய்த ஏழு மாற்றுத்திறனாளி ஜோடிகளும் லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்ல தலைவரும், தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.

சீதனப் பொருட்கள்

ஆயர் இவான் அம்புரோஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து மணமக்கள் கேக் வெட்டினர் ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கத் தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி, பிரிட்ஜ். வாஷிங். மெஷின் கட்டில் மெத்தை, பீரோ. இன்டக்ஷன் அடுப்பு, மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு. மற்றும் அரிசி போன்ற சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.

விழாவில் அருட்பணியாளர்கள் அருட் சகோதரர்கள், அருட்சகோதரிகள், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், சங்க நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மண மக்களுக்கு நல்லாசி வழங்கினார்கள்.

லூசியா இயக்குனர் பாதர் ஜான் பென்சன், உபதலைவர் ஜெயக்குமார், தலைமை ஆசிரியர் பெர்க்மன்ஸ், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் திருமண விழா ஏற்பாடுளை செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img