சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி சார்பில், ஆற்றல் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றல் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியை இக்கல்லூரி ஏற்பாடு செய்திருந்தது.
டேன்ஜெட்கோ கண்காணிப்பு பொறியாளர் டாக்டர் கணேஷ் ஜெயராஜ் பேசும்போது, மின்சாரத்தை திறமையாக பயன்படுத்துவது குறித்தும், வருங்கால சந்ததியினருக்காக அது சேமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மரக்கன்றுகள்
நக்ஷத்ரா ஆட்டோமேஷன் உரிமையாளர் வி.சி. பிரதீப் குமார் அன்றாட பயன்பாட்டில் ஸ்மார்ட் சென்சார்கள் மற்றும் ஆட்டோமேஷன் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாடு வெகுவாக குறையும் என்று தெரிவித்தார். சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியின் நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இக்கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்படும் ஆற்றல் சேமிப்பு முயற்சிகளுக்கு சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் என்.எம். வீரையன், இயக்குனர் ரம்யா தீபக், முதல்வர் ரமேஷ் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார்கள்.