fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலைக்கழக வணிக மேலாண்மை துறை பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

அண்ணாமலை பல்கலைக்கழக வணிக மேலாண்மை துறை பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த வணிக மேலாண்மை துறையின் சார்பாக சாதனையாளர்கள் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் படகாட்சி விளக்கப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியானது (2022) ஆம் ஆண்டில் உலக அளவிலும் மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் துறையினராலும் பல்வேறு விருதுகளை பெற்ற சாதனையாளர்களின் பங்களிப்பை பற்றி மாண வர்களின் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் நடைபெற்றது.

பரிசளிப்பு விழா

நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் லிபரா ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேலாண்மை துறையின் துறை தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கி துவக்கி வைத்து உரையாற்றினார்

முன்னாள் மாணவரான சிங்கப்பூர் ராமநாதன் ஏசிஇ சர்வதேச நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் பங்கேற்று மாணவர்களுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

சென்னையைச் சேர்ந்த கோபி பேசுகையில் எவ்வாறு உற்சாகத்துடன் தற்போதைய உலக நடப்புகளுக்கு தேவையானவற்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசி னார்.

நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் படக்காட்சி விளக்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கோப்பைகள் வழங்கப்பட் டன.

மேலாண்மை துறை முன்னாள் மாணவரான சென்னையை பிரேம் குமார், ஸ்ரீதரன், இணை பேராசிரியர் வரவேற்புரையாற்றினார். சேதுராமன் நன்றி கூறினார். மேலாண்மை துறையை சார்ந்த பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img