மதுரை இலக்கிய மன்றம் மற்றும் ஸ்ரீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளையும் இணைந்து தமிழ்நாட்டில் சிறந்த முறையில் பணியாற்றிய தேசிய மாணவர்படை ஆசிரியர்களுக்கு “வீர மாராயம் 2023” என்ற விருதினை வழங்கி கவுரவபடுத்தியது.
தேசிய மாணவர்படை மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்தல், சமூக சேவைகள் செய்தல், சீருடைபணிகளில் மாணவர்களை சேர்த்தல் போன்று பணிகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது
வீர மாராயம் 2023
கோவை புலிய குளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளி யில் தேசிய மாணவர்படை ஆசிரியராக பணியாற்றி வரும் ஞா.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டருக்கு “வீர மாராயம் 2023” விருதினை மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்வில் மதுரை சரக காவல் துறை துணைத்தலைவர் சு.பொன்னி, சென்னை வருமானத் துறை ஆணையர் (வரிவிலக்கு) மு.ரவிராமச் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விருதினை வழங்கினார்கள்.
“வீர மாராயம்“என்ற விருது சங்க கால இலக்கியங்களில் சிறந்த வீரர்களுக்கு வழங்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற ஆசிரியரை மாணவர்களும், ஆசிரிய ஆசிரியைகளும், தலைமையாசிரியையும் ,பள்ளியின் தாளாளர் அருட்பணி ஆரோக்கிய ததேயு ஆகியோர் பாராட்டினர்.