கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரியின், பெண்கள் மேம்பாட்டு மையம் சார் பில், மாற்று பாலின தொழில் முனைவோர் என்ற தலைப்பில், மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பிரத்யேக பயிலரங்கம், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக எம்.தஸ்லிமா நஸ்ரின் கலந்து கொண்டு, பயில ரங்கைத் தொடங்கி வைத்து, பயிலரங்கிலும் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து கல்லூரியின் உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் சமையல் கலைஞர் கே. அஜித்குமார், பிஸ்கட், பிரெட், கேக் போன்ற பேக்கரி பொருட்கள் தயாரிப்பது எப்படி? என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.
பயிலரங்கம்
இதேபோல் வேதியியல் துறை உதவிப் பேராசிரியை கே.பி. கிரீஷ்மா, தூய் மைப்பொருட்களான பெனாயில், சோப்பு ஆயில், சோப்பு பவுடர் தயாரிப்பது எப்படி? என்று பயிற்சி அளித்தார். குறைந்த முதலீட்டில் வருவாய் ஈட்டுவதற்கு, இப்பயில ரங்கம் வழிகாட்டுதலாக அமைந்தது.
பயிலரங்கின் நிறைவு விழாவிற்கு தலைமை வகித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், பயிற்சியில் கலந்து கொண்ட மாற்றுப் பாலினத்தவர்கள் 20 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறி வியல் கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு மையத்தலைவர் முனைவர் ஜி.கவிதா, செயலர் முனைவர் ஆர்.ரேகா மற்றும் நிர்வாகிகள், மாணவியர் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.