fbpx
Homeபிற செய்திகள்மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட்நடத்திய மருத்துவ முகாமில் குருதி கொடை வழங்கிய இளைஞர்கள் 

மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட்நடத்திய மருத்துவ முகாமில் குருதி கொடை வழங்கிய இளைஞர்கள் 

மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் கோவை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.


மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக இலவச உணவு வழங்குவது, கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை என பல்வேறு சமுதாய நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.


மனித நேய பவுண்டேஷன் டிரஸ்டின் தலைவர் கோவை சுலைமான் தலைமையில் நடைபெற்ற இதில்,டிரஸ்டின் நிர்வாகிகள் முகம்மது உமர்,ஜெம் சாதிக்,சீத்தாராமன் என்ற குமார்,உசேன், தாஹீர்,அசார்,சஞ்சய்,சதாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், கரூர் கிருஷ்ணராயபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ்,தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி,கோவை மாவட்ட கொள்கை கூட்டமைப்பின் பொது செயலாளர் இனாயத்துல்லாஹ், கோவை மாநகர மாவட்ட  துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ்  ,தி.மு.க.இளைஞரணி நிர்வாகி சிங்கை மதன்,முஸ்லீம் விமன் எய்ட் சொசைட்டி கோவை பைசல், ஆகியோர் கலந்து கொண்டு இரத்த தான முகாமை துவக்கி வைத்தனர்.
முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img