fbpx
Homeபிற செய்திகள்20 மாநகராட்சி பள்ளிகளில்‘அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணிதம்’ துவக்கம் !

20 மாநகராட்சி பள்ளிகளில்‘அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணிதம்’ துவக்கம் !

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பகுதியிலுள்ள 12 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள், 8 உயர்நிலைப்பள்ளி என மொத்த 20 மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் வானவில் மன்ற திட்டத்தின் கீழ் ‘அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணிதம்’ திட்டத்தை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார். 


மேலும் மேற்படிப்பு வழிகாட்டுதல், ஆலோசனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின்கீழ் 5000 மாணவர்கள், 300 ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாநகராட்சி பள்ளிகளுக்கும் அறிவியல் உபகரணங்களை மாநகராட்சி கமிஷனர் மூலம் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர் மரியசெல்வம், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img