fbpx
Homeபிற செய்திகள்பெ.நா.பாளையத்தில் மூத்த இசைக் கலைஞர்களுக்கு விருது

பெ.நா.பாளையத்தில் மூத்த இசைக் கலைஞர்களுக்கு விருது

பெரியநாயக்கன்பாளையம் இசைத் தமிழ்ச் சங்கத்தின் 24-வது ஆண்டு விழாவில், இசைத்துறைக்கு மிக நீண்டகாலமாக சிறந்த பங்களிப்பாற்றி வரும் மிக மூத்த கலைஞர்களுக்கு ஞானமணி விருதுகள் வழங்கப்பட்டன.

பெரியநாயக்கன்பாளையத்தில் ஜோதிபுரத்தில் பயனிர் கலை அறிவியல் கல்லூரியில் உள்ள தேவராஜன் கலையரங்கத்தில் ஞாயிற் றுக்கிழமை இவ்விழா நடந்தது.

சங்கத்தின் தலைவர் இரா.விஜயகுமார் தலைமை வகித்தார். ஆலோசகர் கே.சதீஸ்குமார், பொருளாளர் எஸ்.கமலவேணி ஆகியோர் முன்னிலை வகித் தனர். செயற்குழு உறுப்பினர் கே.பத்மநாபன் இறைவணக்கப் பாடலைப் பாடினார். செயற்குழு உறுப்பினர் கே.ஜெகனாதன் வரவேற்றார். சங்கத்தின் செயலர் சிவாய ராமலிங்கம் சங்கத்தின் செயல் பாடுகள் குறித்து விளக்கினார்.

பழைய புதூர் அரசுப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை நாகலட்சுமி சுந்த ரேசன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். யாஷிதா இசைப்பள்ளி,எம்.எஸ்.இசைப்பள்ளி, பைரவி நிருத் யஷாலா பரதநாட்டியப்பள்ளி, ஸ்வர்ண கலா வித்யாலயா, வட சித்தூர் ஸ்ரீ சின்மை கர்நாடக இசைப்பயிலகம்,மேட்டுப்பாளையம் கோகுலம் இசைப்பள்ளி, கணபதி கலா நாட்டியாலயா,பல்லடம் கீத் சங்கீத் இசைப்பள்ளி, சிறுமுகை ஸ்ரீ பாலகிருஷ்ணா நினைவு இசைப்பள்ளி, திருப்பூர் ஸ்ருதிலயா மியூசிக்கல் அகாடமி,பேரூர் கானாமிர்தம் இசைப்பள்ளி,அவினாசி ஸ்ரீஹரிசங்கீத கலாலயம்,கோவை இசைக்கல்லூரி உள்ளிட்டவற்றைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நடனம்,பாட்டு, இசைக்கருவிகளை வாசித்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நீண்ட காலமாக இசைத்துறைக்கு சேவையாற்றி வரும் மிக மூத்த இசைக்கலைஞர்களான கோவை, ராதா வெங்கடேசன்(வீணை), கோவை, சங்கரி சேதுரத்தினம் (வயலின்), ஒண்டிபுதூர், பத்மநாப ராமானுஜ தாசன் (ஹார்மோனியம்), சென்னனூர், திருமலை நம்பி ராமானுஜதாசன் (மிருதங்கம்) வடசித் தூர் ராமச்சந்திரன் (மிருதங்கம்) ஆகியோருக்கு சங்கீத, லய ஞானமணி விருதுகள் வழங்கப்பட்டன.

இவர்களுக்கு மூத்த இசைக் கலைஞர் சிறுமுகை முனுசாமி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தனி வாத்திய கச்சேரிகளும் நடந் தன.

கோவை வட்டாரத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பொள்ளாச்சி மணிகண்டன், எஸ்.என்.சர்மா, அரவிந்தாக்ஷன், அமர்நாத், ஹரிபிரசாத், மதுவந்தி, கார்த்திக், சித்ரலேகா ராமச்சந்திரன், மன்னார்காடு சேதுராமன், திருப்பூர் ஜனார்த்தனன், ஜி.மோ கன் பிரசாத்,வி.மோகன்ராஜ், ஆர்.தேவ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணைத் தலைவர் கே.வெங்க டேசன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img