fbpx
Homeபிற செய்திகள்கிரடாய் அமைப்பின் ‘ஃபேர்புரோ 2023’: சலுகைகளுடன் வீடு, வீட்டுமனை விற்பனை கண்காட்சி

கிரடாய் அமைப்பின் ‘ஃபேர்புரோ 2023’: சலுகைகளுடன் வீடு, வீட்டுமனை விற்பனை கண்காட்சி

கோவை கிரடாய் அமைப்பின் சார்பில் ‘ஃபேர்புரோ 2023’ வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 11 முதல் 13-ம் தேதி வரை, கோவை கொடி சியா வளாகத்தில் இ- ஹாலில் நடை பெறுகிறது.

இது குறித்து கிரடாய் கோவை அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் முகமது ஷபி, செயலாளர் எஸ்.ஆர். அரவிந்த்குமார் ஆகியோர் கூறியதாவது: எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஃபேர்புரோ ஏராளமான சலுகைகளை இந்த முறை தருகிறது.

அனைத்து முன்னணி கட்டுமானத்தினரையும் ஒருங்கிணைத்து, சிறப்பான சலுகை களுடன் வீடு வாங்கும் விற்பனையை கிரடாய் நடத்துகிறது.

இந்த சலுகை விற்பனை 3 நாட்களுக்கு மட்டுமே. ஃபேர்புரோ கண்காட்சியில், வீடுகள், தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகள் மற்றும் மனை வாங்க முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை கிரடாய் உறுப்பினர்கள் மற்றும் முன்னணி வங்கிகள் அளிக்க முன்வந்துள்ளன.

வீடு மற்றும் வீட்டுமனை வாங்க விருப்பம் உள்ள உங்கள் நண்பரை ஃபேர்புரோவில் அறிமுகம் செய்து பரவசமூட்டும் போனஸ் பெறலாம்.

நண்பருக்கு கனவு இல்லத்தை வாங்க ஃபேர்புரோவில், இந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு வெற்றி கரமான அறிமுகத்திற்கும் ரொக்கப் பரிசாக சுமார் 25,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

நண்பர் அறிமுக திட்டத்தை எளிமையாக்கும்விதமாக இது டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடுகளை பதிவு செய்து, வாட்ஸ் ஆப் போன்றவற்றில் தொடரலாம். எளிதான, வெளிப்படையான பரி வர்த்தனைக்கு இது உதவும்.

வீடு வாங்கும் திருவிழாவிற்கு பாரத ஸ்டேட் வங்கி கண்காட்சிக் கான டைட்டில் ஸ்பான்சராக ஆத ரவை வழங்கியுள்ளது. கோல்டன் ஸ்பான்சராக கனரா வங்கி தனது ஆதரவை வழங்கியுள்ளது.

வரும் 11-ம் தேதி சிறப்பு விருந்தினர் ஊரக மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைக்கிறார்.

25 முக்கிய டெவலப்பர்கள், 75-க்கும் மேற்பட்ட திட்டங்கள், 6 முன்னணி வங்கிகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்பு, பிளாட்டு கள் விற்பனை என பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

வீடு விற்பனை திருவிழா, குறைந்த கால அளவு சலுகை வாய்ப்பு. ரியல் எஸ்டேட் மேம்படுத்துவோர், ஏஜென்ட்டுகள், கூடுதல் சலுகைகள் மற்றும் வீடு வாங்க விருப்பம் உள்ளோருக்கு தனித்துவமிக்க சலுகைகள் உள்ளன.

தீபாவளி போன்ற மகிழ்ச்சியை தரும் வீட்டுமனை திருவிழாவோடு கனவு இல்லத்தை தேடி தேர்வு செய்வதோடு, சொத்து மீது முதலீடு செய்யவும் இது ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும் என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img