தொழில்நிறுவனங்கள், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவம னைக்கு கொண்டு செல்ல காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைக்கப் பட்டது.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பல இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ஏதாவது விபத்து ஏற்பட்டு அதில் காயம் அடைந்தவர்களை உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதிக நேரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவம னைக்கு கொண்டு செல்ல காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை சார்பில் மஹேந்திரா வேர்ல்ட் சிட்டி பகுதியை மையமாக கொண்டு இலவச ஆம் புலன்ஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா மஹேந்திராவேர்ல்ட்சிட்டி நுழைவு பகுதியில் நடைபெற்றது. மஹேந்திராவேர்ல்ட் சிட்டி சீனியர் பொது மேலாளர் சுனில்குரியன் வரவேற்றார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல் நாத் கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். தலைமை இயக்குதல் அலுவலர் டாக்டர் வி.பி. சந்திரசேகர் பேசினார்.
எஸ்ஆர்எம் அறிவி யல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கூடுதல் பதிவாளர் முனைவர் டி. மைதிலி, தொடர்புதுறை இயக்குநர் ஆர்.நந்தகுமார், மஹேந்திரா வேர்ல்ட் சிட்டி பொது மேலாளர் தர்மேந்திரா, எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை மார்க்கெட்டிங் தலைமை அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.