fbpx
Homeபிற செய்திகள்‘கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடு’ காவேரி மருத்துவமனையில் செயல்திட்டம் துவக்கம்

‘கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடு’ காவேரி மருத்துவமனையில் செயல்திட்டம் துவக்கம்

ஆகஸ்ட் 6-ம் தேதி உலக ரத்தநாளஅறுவைசிகிச்சை தினம் அனுசரிக்கப்படும் நிகழ்வையொட்டி, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையும் மற்றும் டாக்டர் சேகர் ஃபவுண்டேஷனும் ஒருங்கிணைந்து ‘கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடு’ என்ற செயல்திட்டத்தை துவக்கின.

காவேரி மருத்துவம னையின் ரத்தநாள அறுவை சிகிச்சை துறையின் தலைவரும், ரத்தநாள அறுவைசிகிச்சையில் முன்னோடியுமான டாக்டர் என். சேகர் கூறி யதாவது:

பாதத்தின் ரத்தநாள தன்மையை சரிபார்க்காமல் நீரிழிவு நோயாளிகளுக்கு செய்யப்படும் சிறு அறுவைசிகிச்சையினால் பாதம் உட்பட, கால் போன்ற பல கால் சார்ந்த உறுப்புகளை அகற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

பாதம் உட் பட, கால் உறுப்புக்கு போதுமான அளவு ரத்த ஓட்டம் இருப்பதை உறுதி செய்யாமல், நீரிழிவு நோயா ளிகளுக்கு பாதத்தில் எந்த அறுவைசிகிச்சையும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி கூறிவருகிறோம்.

அந்நேரத்தில் சரியான நோயறிதல் செய்யப் படுமானால் மற்றும் உரிய சிகிச்சை உடனடியாக வழங்கப்படுமானால், கால் உறுப்பு அகற்றத்தினை தவிர்க்க முடியும்.
ஆகவே, உறுப்புநீக்கலை தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் செய்யப்ப டுவது மிக முக்கியம் என்றார்.

மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: கால்களில் புண்கள் அல்லது சதை அழுகல் ஏற்படுவதற்கும் மற்றும் அதன் தொடர்ச்சியாக கால் உறுப்பு அகற்றலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது நீரிழிவே.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை மற்றும் புகை யிலையை தவிர்ப்பது போன்ற அடிப்படை வாழ்க்கைமுறை திருத் தங்களை செய்வது, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

நீரிழிவு இருப்பதாக அல்லது நீரிழிவு வரு வதற்கு சாத்தியம் இருப் பதாக நோயறிதலில் கண்டறியப்படும் நபர்க ளுக்கு மருத்துவரை சந்திக்குமாறும் மற் றும் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. எனினும், இதில் அக்கறை காட்டாமல் அலட்சியம் செய்யப்படுமானால் அது இன்னும் அதிக சிக்கல்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்றார்.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் அதன் செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வ ராஜ் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

படிக்க வேண்டும்

spot_img