fbpx
Homeபிற செய்திகள்உயர் திறனுள்ள ப்ரீமியம் பைக்குகளுக்காக ‘எம்ஆர்எஃப்’ ஸ்டீல் பிரேஸ் ரேடியல் டயர் அறிமுகம்

உயர் திறனுள்ள ப்ரீமியம் பைக்குகளுக்காக ‘எம்ஆர்எஃப்’ ஸ்டீல் பிரேஸ் ரேடியல் டயர் அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எஃப், உயர் செயல்திறன் மிக்க மோட்டார் சைக்கிள்களுக்கென சிறப்பாக தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய ஸ்டீல் பிரேஸ் ரேடியல் டயர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டீல் பிரேஸ் ரேடியல் டயர்கள், அதிக சவாலான தரைப்பரப்புகளிலும், சூழ்நிலைகளிலும் அசாதாரணமான, மிகச்சிறப்பான செயல்திறன் தேவைப்படும் உயர் திறனுள்ள ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களுக்கென குறிப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் டயர்களாகும். இவை, மிக அதிக சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.

எம்ஆர்எஃப் நிறுவனத்தில் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழு (R&D) கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதன் பொறியியல் செயல்பாடுகளில் உயர் நேர்த்தியுள்ளதாக ஆக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. அதற்குப் பிறகு, நிஜ உலகின் ரேஸிங் சூழ்நிலைகளில் விரிவான பரிசோதனைகளுக்கு இந்த சிறப்பு டயர்கள் உட்படுத்தப்பட்டன.

எம்ஆர்எஃப் – ன் புதிய அறிமுகமான இந்த ஸ்டீல் பிரேஸ் ரேடியல் டயர்கள், உறுதியான நிலைப்புத் தன்மையையும், மேம்படுத்தப்பட்டிருக்கும் பிடிமானத் திறனையும் வழங்குகின்றன. துரிதமான அதிர்வு ஏற்பையும் மற்றும் ஸ்டியரிங் பதில்வினையையும் மிக விரைவாக வழங்கும் திறன் கொண்டவையாகவும் இந்த டயர்கள் இருக்கின்றன.

ரேஸிங் செயல்பாடுகளின்போது உயர் வேகத்திற்கான தேவைப்பாடுகள் இருப்பதால், வளைவுகளில் திரும்பும் செயல்பாட்டிற்கு டயர்களின் விரிவான தொடர்புத் திறனையும் இவை சிறப்பாக வழங்குகின்றன.

இதில் இடம்பெற்றிருக்கும் மேம்பட்ட ட்ரெட் பேட்டர்ன், ஈரமான தரைப்பரப்புகளிலும், வலுவான பிடிமானத்தை வழங்குகின்றன. அத்துடன், ஒரே சீராக டயர்களில் தேய்மானம் நிகழ்வதை உறுதி செய்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img