fbpx
Homeபிற செய்திகள்சென்னை நகரை அழகுபடுத்தும் வண்ண ஓவியங்கள்

சென்னை நகரை அழகுபடுத்தும் வண்ண ஓவியங்கள்

சென்னையில் உள்ள கண்ணகி நகரை அழகுபடுத்தும் விதமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டிக் கொடுத்த வீடுகளில் அழகிய வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த பணியை எஸ்டி+ஆர்ட் இந்தியா அறக்கட்டளை மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை இணைந்து செய்துள்ளன.

நொச்சிக்குப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கலைப்பணியும் நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் சென்னை நகரில் இரண்டு இடங்களில் இந்த திறந்தவெளி ஓவியங்களை பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம்.

வாழ்விடங்களை மிகவும் அழகாகவும், கலையை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பணியை ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து எஸ்டி+ஆர்ட் இந்தியா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

நொச்சி கலை மாவட்டம் என்று அழைக்கப்படும் இது இந்தியாவின் 7-வது கலை மாவட்டமாக உருவெடுத்துள்ளது. மாநிலத்தின் மூன்றாவது திறந்தவெளி மற்றும் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இந்த கலைக்கூடம், இப்போது பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்காக திறக்கப்பட்டுள்ளது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட பணியின்போது நொச்சிக்குப்பத்தில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் கேன்வாஸ் பெயிண்டிங்காக மாற்றப்பட்டு இதில் சமூகத்தின் உணர்வைப் பிரதிபலிக்கும் வசீகரிக்கும் சுவரோவியங்கள் இடம்பெற்றுள்ளன.

1200-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசிக்கும் போர்ஷோர் எஸ்டேட் கடற்கரையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியானது,
தற்போது காண்போர் கண்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் பகுதியாக மாறி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img