கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வுயிர் ரத்ததானத் திட்டம் தொடக்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தொடக்கவிழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் தலைமை வகித்து பேசி னார்.
பாரதியார் பல் கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்.) ஒருங்கிணைப் பாளர் முனைவர் ஆர். அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகப் பங் கேற்றார்.
ரத்ததானத்திற்கான பிரத்யேக செவ்வுயிர் ரத்தத்தானத் திட்டத்தினை சிறப்பு விருந்தினர் கோவை மாநகர தெற்கு கோட்ட துணைக் காவல் ஆணையர் கே. சண்முகம் தொடங்கி வைத்து பேசியதாவது,
காவல்துறையில் உயர் பொறுப்புகளை பெறுவதற்கு என் பள்ளி நாட்களில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் பங்காற்றியது தான் மிக முக்கிய காரணம்.
நாட்டு நலப்பணித்திட்டத்தில் இணைந்துள்ள மாண வர்கள் கல்லூரியில் பயிலும் காலங்களில் கல்வி யோடு மற்றும் நின்று விடாமல் சமூகம் சார்ந்த சிந்தனையும் வளர்வதற்கு நாட்டு நலப்பணித்திட்டம் உறுதுணையாக விளங்கும்.
இந்த பருவத்தில் அருவி நீர் போன்ற ஆற்றலும் உத்வேகமான சிந்தனையும் மேலோங்கும். மாணவர் பருவம் எளிதில் எதையும் கற்றுக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. நமது எண்ணங்கள் தடம் மாறாமல் சரியாக பயணிப்பதற்கு நாட்டு நலப்பணித்திட்டம் உதவும்.
குழுவாக செயல் படுதல், திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், சமூக அக்கறையுடன் செயல் படுதல் ஆகியவை இங்கு வளர்வதற்கான சூழல் முழுமையாக உள்ளது. மாணவர்கள் தங்களை முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
கோயம்புத்தூர் மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவதில் இக்கல்லூரி முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நாட்டு நலப்பணித் திட்டத் தின் ஒவ்வொரு யூனிட் டுக்குமான மாணவத் தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மாணவர்களின் திறன் களை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறந்து விளங்கிய மாண வர்களுக்கு பாராட்டு சான் றிதழ் வழங்கப்பட்டது.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செ.பிரகதீஷ் வரன் வரவேற்றார். முனைவர் ஆர்.நாகராஜ் நன்றி கூறினார்.
இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.