fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். கல்வி நிறுவனத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா

கே.பி.ஆர். கல்வி நிறுவனத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா

கேபிஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரிக்கான புதிய கட்டிடத் திறப்பு விழா மற்றும் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிய மாணவர் விடுதி கட்டிட திறப்பு விழா நேற்று (ஆக.21) நடந்தது.

கேபிஆர் கல்விக்குழுமங்களின் தலை வர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக, கோவை ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் தலைவர் முனைவர் ஆர்.நந்தினி, புதிய கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் புதிய கட்டிட வளாகத்தையும், கோவை அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி சீனிவாசன், புதிய மாணவர்கள் விடுதி கட்டிட வளாகத்தையும் திறந்து வைத்தனர்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல் லூரிக் கட்டிடத்தில் நூறு வகுப்பறைகள், பத்து கணினி ஆய்வகங்கள், இரண்டு ஆடை மற்றும் வடிவமைப்பு ஆய்வகங்கள், இரு கலையரங்குகள், பன்னிரு கலந்தாலோசனைக் கூடங்கள், இரு கருத்தரங்க அறை, ஒரு மின் நூலகம், நான்கு ஆலோசனைக் கூடங்கள், 2000 பேர் அமரக்கூடிய காட்சிக்கூடம், உணவருந்தும் அறை, சுகாதார மையம், காணொளி பதிவரங்கு, இசைப்பயிற்சி அரங்கு, இன்குபேசன் சென்டர், சிற்றுண்டியகம், முதலியவை அமைந்திருக்கின்றன.

கேபிஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி வளாகத்தில்ஆயிரம் மாணவர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட விடுதி அறைகளும், குளிர்சாதன வசதி கொண்ட அறைகளும், வெளிநாட்டு மாணவர்கள் தங்குவதற்கு தேவையான விடுதி அறைகளும் கட்டப்பட்டுள்ளது.

விழாவில் கேபிஆர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்கள், நிர்வாக இயக்குநர்கள், கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கேபிஆர் கலை அறிவியல் ஆராய்ச்சி கல்லூரி ஆகியவற்றின் முதல்வர்கள், இரு கல்லூரிகளையும் சார்ந்த புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img