fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் நேசனல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் குறுமைய விளையாட்டு போட்டிகள்

மேட்டுப்பாளையம் நேசனல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் குறுமைய விளையாட்டு போட்டிகள்

2023-24 ம் கல்வியாண்டில் மேட்டுப்பாளையம் வட்டார அளவில் மாணவர்களுக்கான குறுமையப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது கடந்த ஒரு மாதமாக மேட் டுப்பாளையம் நேசனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பூப்பந்து 14, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும், எரிபந்து (17) மாணவர்களுக்கும், கால்பந்து (17) மாணவர்களுக்கும் நடத்தப்படடு வருகின்றன.

இப்போட்டிகள் காரமடை அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை திருசெல்வி தலைமையில் நடத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜப்பன் முன்னிலையிலும் மற்றும் இதர உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள் வழிகாட்டுதலிலும் நடத்தப்படுகிறது.

இப்போட்டியினை நேசனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ரங்கசாமி, செயலாளர் வேலுச்சாமி, இணைச் செயலர் சந்திரன், அறங்காவலர் ராமசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் பாரத் மற்றும் முதல்வர் மனோன்மணி ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img