கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியின் 22-வது முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் இணைப்பு விழா நேற்று (ஆக.30) நடந்தது.
சிறப்பு விருந்தினர் பட்டிமன்ற பேச்சாளர் எஸ். ராஜா பேசும்போது, இலக்குகளை நோக்கிச் சரியாக நேரத்தை, சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
எஸ். என். ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் டி. லஷ்மிநாராயணசுவாமி தலைமை தாங்கி பேசும் போது, கல்லூரியில்
உள்ள நவீன உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் மற்றும் நூலகங்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்தி, பல்வேறு திறன்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மிக உயரிய நிலையை அடைய வேண்டும் என்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு. பால்ராஜ் வரவேற்றார்.
மின் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவர் முனைவர் சி.ஆர். ஹேமா நன்றி கூறினார்.