சிவகங்கை மாவட்டம், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் காளையார்கோவில் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு நடத்தினார்.
காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வாயிலாக கற்பிக்கப்படும் முறை குறித்தும் ஆட்சியர் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவேடு, பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நூலககத்தில் மாணவர்களின் பயன் பாடு, புத்தக இருப்பு, கூடுதலாக நிறுவ வேண்டிய புத்தக வகைகள் உள்ளிட்டவையும், சமையலறையில் உட்கட்டமைப்பு வசதிகள், மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை பற்றியும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கழிப்பறை வசதிகள், பயனற்றி நிலையில் உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்துதல் மற்றும் புதிதாக கட்டப்பட வேண்டிய கூடுதல் கட்டிடங்கள், கூடுதல் ஆசிரியர்களின் தேவை, மேம்படுத்த வேண்டிய கூடுதல் தேவைகள், அடிப்படை வசதிகள் ஆகியன குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.