தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்று விளையாட கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் எஸ்.ஹேமந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்படும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது.இதில், கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் எஸ்.ஹேமந்த் பங்கேற்று, சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து, அவர் இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் (எஸ்.ஜி.எஃப்.ஐ) நடத்தும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவர் எஸ்.ஹேமந்தை ஸ்டேன்ஸ் பள்ளி முதல்வர் செலின் வினோதினி, பயிற்சியாளர் கனகராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.