fbpx
Homeபிற செய்திகள்ஆதிதிராவிட நல மாணவர் விடுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

ஆதிதிராவிட நல மாணவர் விடுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை மாநகராட்சி, ராமநாதபுரம், 80 அடி சாலைப் பகுதியில் அமைந்துள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் நல விடுதி மற்றும் பந்தய சாலையில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு மாணவர்களுக்காக சமைக்கப்படும் உணவின் தரம் குறித்தும், மாணவர்களின் அறைகள் சுத்தமாக உள்ளதா என்பது குறித்தும் விடுதிகாப்பாளரிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கு உள்ள மாணவர்களிடம், தங்களுக்கு உணவு சுவையாக வழங்கப்படுகிறதா எனவும், விடுதியில் தேவையான வசதிகள் உள்ளதா எனவும் கேட்டறிந்தார். மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவினை உண்டு தரத்தினை பரிசோதித்தார்.

மேலும், அங்குள்ள நூலகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாணவர்களிடம் நூலக புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை தினந்தோறும் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் ஆங்கிலமொழி கற்பதற்கான புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாணவர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் என்.முருகேஷ், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img