ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது 275-வது புதிய ஷோரூமை லட்சுமி மில்ஸ் வணிக வளாகம், லூலூ ஹைப்பர் மார்க்கெட் அருகில் துவக்கி உள்ளது.
கல்வியாளர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாண வராயர் ஷோரூமை திறந்து வைத்தார்.தி லட்சுமி மில்ஸ் கம்பெனி லிட்., சேர்மன் மற்றும் மானேஜிங் டைரக் டர் எஸ்.பதி முதல் விற்ப னையை துவக்கி வைத்தார்.
சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைப் பெற் றுக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் எஸ்.பழனிசாமி, மரபின் மைந்தன் முத்தையா, கோவை துணை மேயர் வெற்றிச் செல்வன், எஸ்கேஒய் சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். காந்தியைக் கொண்டா டுவோம் என்ற புத்தகத்தை பொங்கலூர் பழனிசாமி வெளியிட, லட்சுமி மில்ஸ் கம்பெனி லிட். ஆதித்யா பதி பெற்றுக் கொண்டார்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன், இணை நிர்வாக இயக்குநர் அஸ்வின் ஆகியோர் வரவேற்றனர்.