fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சிதம்பரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சிதம்பரம் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளி வாகங்களையும் வட்டாரப் போக்குவரத் துறை மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா ஆய்வு மேற்கொண்டார்.


சிதம்பரம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், இந்த ஆய்வு நடைபெற்றது.


இதையொட்டி,ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பள்ளி வளாகத்திலேயே பேருந்துகள்,வேன்களை மோட்டார் வாகன ஆய் வாளர் விமலா ஆய்வு செய்தார்.

மேலும்,பள்ளி நிர்வாகம் வாகன பராமரிப்பில் அரசு விதிமுகளைக் கடைப்பிடிக்க வேண்டும், வாகனங்களை பள்ளிப் பொறுப்பாளர்கள் தினந்தோறும் ஆய்வு செய்து, தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும்,தலைமை ஆசிரியர்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்

படிக்க வேண்டும்

spot_img