புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கவே முடியாது என்ற உண்மையை மக்களிடம் சொல் லுங்கள்” என தேனியில் நடந்த மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
தேனி மாவட்ட பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரீத்தா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜபாண்டி, ஊராட்சி செயலர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அர சுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தங்கள் பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வசிப்பவர்களை இடமாற்றம் செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த வனத்துறை அதிகாரி, வனச் சட்டம் குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. அதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வனச் சட்டம் பற்றி தெரியாமல் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பட்டா மாறுதல் பெறலாம் என மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் வாக்குறுதிகளை அளிக்காதீர்கள்.
புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கவே முடியாது என்ற உண்மையை மக்களிடம் சொல்லுங்கள், எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி, தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 1065 அங்கன்வாடி மையங்களுக்கு சொந் தமாக 676 கட்டிடங்கள் மட்டுமே உள்ளது. மீதமுள்ள மையங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது.
எனவே சொந்த கட்டிடம் கட்டவும், அங்கன்வாடி மையங்க ளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கூட்டத்தில் ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.