fbpx
Homeபிற செய்திகள்இளம்பெண்களுக்காக பாஸ்ட்ராக் அறிமுகப்படுத்துகிறது ‘வைப்’ கைக்கடிகாரம்

இளம்பெண்களுக்காக பாஸ்ட்ராக் அறிமுகப்படுத்துகிறது ‘வைப்’ கைக்கடிகாரம்

இந்தியாவின் இளைய தலைமுறையினரிடையே ஏகோபித்த ஆதரவைப்பெற்ற ஃபாஸ்ட்ராக் சமீபத்தில் இளம் பெண்களுக்காக பிரத்யேகமாக வைப் எனும் துணை பிராண்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

இளமைத்துள்ளல், அசத்தும் ஸ்டைல் என தனக்கே உரிய தனித்துவத்துடன் அறிமுகமாக இருக்கும் வைப், ஃபேஷன் மிக புதிய டிசைன்களில் ஃபேஷன் பிரியைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் எந்தவிதமான பார்ட்டிகளானாலும் கொண் டாட்டங்களாக இருந்தா லும் அதில் இளம்பெண்களின் எதிர்பார்புகளைப் பூர்த்திசெய்து, அவர்களது வசீகரத்தை மற்ற வர்கள் கவனிக்க தூண்டும் கைக்கடிகாரங்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வைப்-ன் முதல் தொகுப்பில், பார்ப்பவர் களை அசரவைக்கும் 71 அசத்தல் வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

வித்தியாசமான, அழகியலு டன் வடிவமைக்கப்பட்டிருக்கும் கைக்கடிகார பட்டைகள், புத்தம் புதிய ப்ளேட்டிங் வண்ணங்கள், மனதைக்கவரும் விதவிதமான டயல் வடிவங்கள் என இந்த கைக்கடிகாரத் தொகுப்பு ஒவ்வொரு தருணத்திற்கும், நம்முடைய ஒவ்வொரு மன உணர்வுக்கும் ஏற்ற ஏதாவது ஒரு கைக்கடிகாரம் இருப்பதை வைப் உறுதி செய்கிறது.

இவை மிக மலிவான விலையில் ரூ.1250 முதல் ரூ.2960 வரை கிடைக்கிறது. ஃபாஸ்ட்ராக் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் அஜய்மௌர்யா தங்களது புதிய துணை பிராண்ட்டின் அறிமுகம் குறித்து பேசுகையில், ‘பார்ட்டிகள், விருந்து கொண்டாட்டங்களில் தங்களது அழகும் ஆளுமையும் வெளிப்படும் வகையில் அலங்கரித்து கொள்ளும் பெண்களுக்காக வைப்-ஐ அறிமுகப்படுத்துகிறோம்.

வைப் கைக் கடிகாரங்கள், இந்தியா முழுவதிலும் பாஸ்ட்ராக், டைட்டன் வேர்ல்ட் விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன. மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல பிராண்ட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.

ஆன்லைன் மூலம் வாங்க, ஃபாஸ்ட்ராக்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், ஃப்ளிப் கார்ட் இணையதளத்திலும் கிடைக்கின்றன என்றார்.

படிக்க வேண்டும்

spot_img