fbpx
Homeபிற செய்திகள்பல்வேறு போட்டிகளுடன் முத்தமிழ் விழா கொண்டாட்டம்

பல்வேறு போட்டிகளுடன் முத்தமிழ் விழா கொண்டாட்டம்

கோவை அரசினர் பொறியியற் கல் லூரி கோவை, தமிழ் மற்றும் நுண்கலை மன்றம் சார்பில் முத்தமிழ் விழா ‘23 நடத் தப்பட்டது. இப்பெரும் விழா அக்டோபர் 27, 28 இரண்டு நாட்கள் அனைத்து கல்லூரிகளும் பங்கேற்கும் ஓர் போட்டி திருவிழாவாக நடந்தேறியது.

பிரபல தொலைக்காட்சிகளின் பட்டி மன்ற பேச்சாளர் கவிஞர் உமாமகேஸ்வரி தலைமையில், தம் கல்லூரி மாணாக்கரின் புத்தக வெளியீட்டு விழா, அதனைத் தொடர்ந்து சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது.

பின்பு விழா முத்தமிழாய் வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. குழுப் போட்டிகளுக்கு நடுவர்களாக உடல் வெளி கலை அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் , நடிகருமான தரணிதரண், நான்காம் தலைமுறை வில்லிசைக் கலை ஞர் காளீஸ்வரன், கலைச்சுடர் விருது பெற்ற கலைஞர், கவிஞர் முனைவர் ராம், பாரத், கலாம், நோபல், கின்னஸ், போன்ற பல சாதனைப் புத்தகங்களை அலங்கரித்த, இளம் பாரதி விருது பெற்ற முனைவர் கலையரசன் சிறப்புச் செய்தனர்.

இரண்டு நாட்களாக விருவிருப்பாய் பல கல்லூரிகளுக்கிடையே நடந்த இப் போட்டிகளின் சுழற்கோப்பையை சேலம் அரசினர் பொறியியற் கல்லூரி தட்டி சென்றது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராம கிருஷ்ண பொறியியல் கல்லூரி, கோவை இரண்டாம் இடத்தை பிடித்தது. இனிதே “இப்படை தோற்கின், எப்படை வெல்லும்“ என்ற முழக்கத்துடன் ஏகலைவர்களின் விழா முடிந்தது.

படிக்க வேண்டும்

spot_img