வத்தலகுண்டுவில், சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் டிடி மஹால் திருமண மண்டபத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா, பல் வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு புத்தாடை வழங்கி கௌரவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடை பற்றது.
வத்தலகுண்டு பேரூராட்சி தலைவர் பா.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் கணவாய்பட்டி ரோடு, கே.கே.நகர் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் ஸ்டான்லி பீட்டர் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் டி.ராஜேந்திரன், முத்து ஸ்டியோ உரிமையாளர் ரோட்டரி டி.முருகேச பாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கோவை அரசு கலை கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் பெருமாள்சாமி சூர்ய நாராயணன் சிறப்புரையாற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பேரூராட்சி தலைவர் பா.சிதம்பரம், மகாலட்சுமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சொரூபராணி ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
விழாவில் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சங்கமித்ரா சுற்று ச்சூழல் முன்னேற்ற அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அல் அமீன் நன்றி கூறினார். விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.