கோவை மாவட்டம் சிறுமுகை அருகில் உள்ள சின்னக்கள்ளிப்பட்டி, தண்ணீர் பந்தலில் இயங்கி வரும் ஃபயர் (FIRE) மனித வள மேம்பாட்டு அறக்கட்டளையின் 28வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மனித குல மேம்பாட்டிற்காக அர்ப்பணிப் போடு சேவைகள் செய்து வரும், பிறரால் அடையாளம் காணப்படாத ஐந்து சமூக சேவகர்களை தேர்வு செய்து அவர்களை கௌரவித்து, ஊக்கப்படுத்தும் விதமாக விரு துகள் வழங்கப்பட்டன.
ஃபயர் 2023 குழந்தைகள் திட்டத்திற்கான விருது ஆதிரைக்கும், இளைஞருக்கான விருது ரம்யாவுக்கும், பெண்களுக்கான விருது ஜெனிபருக்கும், முதியோருக்கான விருது சிவகுமாருக்கும், மாற்றுதிறனாளிகளுக்கான விருது கவிதாவுக்கும் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு ஃபயர் நிறுவனத்தின் நிர்வாக அறங் காவலர் ஜேசப் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார். நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் டாக்டர் லெஸ்லி சுரேஷ் விருது குறித்து விளக்க மளித்தார்.
மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் தலைவர் சீனிவாசன் தலைமை உரையாற்றி விருதுகள் வழங்கினார். ஃபயர் நிறுவனத்தின் திட்ட மேலாளர் வள்ளி இவ்விழாவின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் சக்குபாய் நன்றி கூறினார்.