தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கிடும் சங்க கட்டிடத்தை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி , மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில மீனவரணி துணைச் செயலாளர் ஃபுளோரன்ஸ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர்.