fbpx
Homeபிற செய்திகள்மோடி அரசை அகற்ற வரும் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்

மோடி அரசை அகற்ற வரும் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவங்கி வைக்க நேற்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா மேட்டுப்பாளையம் வந்தார்.

காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதியான பள்ளேபாளையம் ஊராட்சி குமரன் குன்று பகுதியில் சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை பணிகளுக்கும் பெள்ளாதி ஊராட்சி சேரன் நகர் பகுதியில் 12லட்சம் ரேசன் கடை கட்டவும் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.

குமரன் குன்று பகுதியில் உள்ள திருப்பூர் பிரதான சாலையில் இருந்து அருள்மிகு கல்யாண சுப்பிரமணியர் கோவில் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட உள்ள சாலை பணிகளை எம்.பி. ஆ.ராசா துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பள்ளேபாளையம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி தலைவர் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதங்களை வைத்து அரசியல் செய்யும் பா. ஜ. கவுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை அகற்ற எனக்கு வாக்களியுங்கள் என கேட்கவில்லை இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள், என பொதுமக்களை கேட்டு கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img